பிளஸ் 2 பொது தேர்வு விடைத்தாள் நகலை இன்றுமுதல் பதிவிறக்கம் செய்யலாம்: அரசு தேர்வுத்துறை அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, May 27, 2024

பிளஸ் 2 பொது தேர்வு விடைத்தாள் நகலை இன்றுமுதல் பதிவிறக்கம் செய்யலாம்: அரசு தேர்வுத்துறை அறிவிப்பு

 பிளஸ் 2 பொது தேர்வு விடைத்தாள் நகலை இன்றுமுதல் பதிவிறக்கம் செய்யலாம்: அரசு தேர்வுத்துறை அறிவிப்பு


பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் நகலை இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது

CLICK HERE 12 ONLINE LINK

இதுதொடர்பாக அரசு தேர்வுகள்இயக்குநர் எஸ்.சேதுராம வர்மாநேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதி,விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள், 28-ம் தேதி (இன்று) பிற்பகல் 2 மணி முதல்அரசு தேர்வுத்துறையின் இணையதளத்தில் அவற்றை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்

மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், மேற்கண்ட இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். பூர்த்திசெய்த விண்ணப்பத்தின் 2 நகல்கள் எடுத்து, அவற்றை உரிய கட்டணத்துடன் மே 29 முதல் ஜூன் 1-ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கான கட்டணத்தை பணமாக செலுத்த வேண்டும்

No comments:

Post a Comment