மாதாந்திர உதவி தொகையுடன் அம்பத்தூர் அரசு ஐடிஐ-யில் பல்வேறு தொழிற்பயிற்சிகள்: பெண்கள் விண்ணப்பிக்க அழைப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, May 19, 2024

மாதாந்திர உதவி தொகையுடன் அம்பத்தூர் அரசு ஐடிஐ-யில் பல்வேறு தொழிற்பயிற்சிகள்: பெண்கள் விண்ணப்பிக்க அழைப்பு

 மாதாந்திர உதவி தொகையுடன் அம்பத்தூர் அரசு ஐடிஐ-யில் பல்வேறு தொழிற்பயிற்சிகள்: பெண்கள் விண்ணப்பிக்க அழைப்பு


அம்பத்தூர் அரசு மகளிர் ஐடிஐயில் மாத உதவித் தொகையுடன் பல்வேறு தொழிற்பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதில் சேர பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுதொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: அம்பத்தூர் அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) 2024-25 கல்வி ஆண்டுக்கான சேர்க்கை மே 10-ம் தேதிமுதல் நடந்து வருகிறது

இங்கு ஓராண்டு கால தையல் தொழில் நுட்பம், தேசிய தொழிற்பயிற்சி கவுன்சிலின் (NCVT) கம்ப்யூட்டர் ஆபரேட்டர் - புரோகிராமிங் அசிஸ்டென்ட் (‘கோபா’) பயிற்சி,சுருக்கெழுத்து (தமிழ், ஆங்கிலம்), 2 ஆண்டு கால கட்டிட பட வரைவாளர் படிப்புகள் வழங்கப்படு கின்றன.

வயது வரம்பு கிடையாது: தையல் படிப்பில் சேர 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்ற படிப்புகளுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி அவசியம். வயது வரம்பு கிடையாது. பயிற்சியில் சேர்பவர்களுக்கு மாதம் ரூ.750 உதவித்தொகை வழங்கப்படும்.

6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவிகள் கூடுதலாக ரூ.1,000 உதவித் தொகை பெறலாம். இலவச பேருந்து அட்டை, சைக்கிள், பாடப் புத்தகங்கள், வரைபட கருவிகள், 2 செட் சீருடைகள், ஷூ ஆகியவையும் வழங்கப்படும். படித்து முடித்தவுடன் சிறந்த தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும்.

பயிற்சியில் சேர விரும்புவோர் தங்கள் மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழ் (டிசி), சாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்-5 ஆகியவற்றை எடுத்துவர வேண் டும்.

விண்ணப்ப கட்டணம் ரூ.50. நேரில் வர இயலாதவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment