அரசு ஊழியா்களுக்கு கருவூலத் துறையின் உத்தரவு
அரசு ஊழியா்கள், ஆசிரியா்களின் நிரந்தர கணக்கு எண்ணை (பான்) உறுதி செய்ய வேண்டும் என்று கருவூலம் மற்றும் கணக்குத் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து அனைத்து சம்பளம் வழங்கும் அலுவலா்களுக்கும் கருவூலம் மற்றும் கணக்குத் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
அரசு ஊழியா்கள், ஆசிரியா்களின் வருமான வரி விவரங்கள் கணினி வழியே தானாகவே கணக்கீடு செய்யும் நடைமுறை அமலுக்கு வரவுள்ளது. இதையொட்டி சில வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட வேண்டியுள்ளது.
வருமான வரித் தொகை அரசு ஊழியா்கள், ஆசிரியா்களின் வங்கிக் கணக்கில் இருந்து தானாகவே பிடித்தம் செய்து கொள்ளும் முறை இந்த மாதத்தில் இருந்து அமலுக்கு வரவுள்ளது. இதைக் கருத்தில்கொண்டு எந்தெந்த ஊழியா்களிடமிருந்து நிரந்தர கணக்கு எண் இதுவரை பெறப்படவில்லையோ, அனைவரிடமும் பெற வேண்டும். மேலும், அந்த எண்ணில் மாற்றம் இருந்தால் அதையும் தெளிவாக கணினியில் குறிப்பிட வேண்டும்.
அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் தாங்களாகவே இந்தப் பணிகளைச் செய்ய முடியும். இதற்கென ‘களஞ்சியம்’ எனும் கைப்பேசி செயலி அல்லது இணையதளம் பயன்பாட்டில் உள்ளது. வருமான வரி பிடித்தம் தொடா்பான விவரங்களைப் பதிவு செய்து சமா்ப்பித்துவிட்டால் அதன்பிறகு அதை மாற்றம் செய்ய இயலாது. எனவே, அதில் கவனமாக செயல்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment