மாவட்ட கல்வி அதிகாரிகள் அப்பீல் - தேர்வு பட்டியல் முடிவு வெளியிட தடை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, May 23, 2024

மாவட்ட கல்வி அதிகாரிகள் அப்பீல் - தேர்வு பட்டியல் முடிவு வெளியிட தடை

 மாவட்ட  கல்வி அதிகாரிகள் அப்பீல் - தேர்வு பட்டியல் முடிவு வெளியிட தடை


கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள - JOIN OUR WHATSAPP GROUP


மாவட்ட கல்வி அதிகாரிகள் 18 பேரின் தேர்வு பட்டியலை ரத்து செய்ததை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. மீண்டும் தேர்வு பட்டியலை தயாரிக்க அனுமதித்த உயர் நீதிமன்றம், இறுதி முடிவை வெளியிட தடை விதித்துள்ளது.

மாவட்ட கல்வி அதிகாரி பதவிக்கான 18 காலியிடங்களை நிரப்ப, விண்ணப்பங்களை வரவேற்று, 2018 டிசம்பரில், அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டது.

தேர்வுகள் நடந்து முடிந்து, 2020 டிசம்பரில் வரிசை பட்டியல் வெளியிடப்பட்டது; நியமனங்களும் நடந்து முடிந்தன. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், நிர்மல்குமார் என்பவர் உள்ளிட்டோர் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

மனுக்களை விசாரித்த நீதிபதி மஞ்சுளா பிறப்பித்த உத்தரவு:

இடஒதுக்கீட்டு முறையையும், பிரிவு வாரியான ஒதுக்கீட்டையும் பின்பற்றாமல், ஒழுங்கற்ற முறையில் தேர்வு நடந்துள்ளது. எனவே, மாவட்ட கல்வி அதிகாரிகள் நியமனம் ரத்து செய்யப்படுகிறது.

காலியிடங்களின் அடிப்படையில் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றி, பொதுப் பிரிவினருக்கு எனவும், ஆசிரியர் பிரிவினருக்கு எனவும் தனித்தனியே தேர்வு பட்டியலை வெளியிடும் வகையில், மீண்டும் தேர்வு பட்டியலை தயாரிக்க உத்தரவிடப்படுகிறது.

நான்கு வாரங்களில் இந்தப் பணிகளை முடித்து, திருத்தப்பட்ட தேர்வு பட்டியலை வெளியிட வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து, தற்போது பணியில் உள்ள மாவட்ட கல்வி அதிகாரிகள் தரப்பில், மேல்முறையீடு செய்யப்பட்டது.

இம்மனு, நீதிபதிகள் சுவாமிநாதன், பாலாஜி அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்க, அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை, ஜூன் 10க்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

திருத்திய தேர்வு பட்டியலை தயாரிக்கும் பணிகளை மேற்கொள்ள, தேர்வாணையத்துக்கு அனுமதி அளித்த நீதிபதிகள், இறுதி முடிவுகளை வெளியிட தடை விதித்தும், வழக்கு விசாரணை முடியும் வரை தற்போது பணியில் உள்ள அதிகாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என உத்தரவிட்டுள்ளனர்

தினமலர் செய்தி 


கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்து மின்னல் கல்விச்செய்தி 3 வது குழுவில் இணையவும் - JOIN HERE

ஏற்கனவே 1 முதல் 15 வது மின்னல் கல்விச்செய்தி குழுவில் இணைந்திருந்தால் மீண்டும் 3 வது குழுவில் இணைய வேண்டாம் 

No comments:

Post a Comment