கல்விச் செய்திகள் - தலைப்புச் செய்திகள்- 15.06.2024
கல்விச் செய்திகள் - தலைப்புச் செய்திகள்
14 ) கல்லூரி சேர்க்கையை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் ரத்து செய்யும் மாணவர்களுக்கு முழு கல்விக் கட்டணத்தை திருப்பி தர வேண்டுமென யுஜிசி உத்தரவிட்டுள்ளது.
13 ) சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக 2024 - 25ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
12 ) பெரியாா் பல்கலைக்கழக இளநிலை, முதுநிலை மாணவா்களுக்கான தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன.
11 ) டெல்லியில் உள்ள அம்பேத்கர் பல்கலைகழகத்தில் 1100 முதுகலை படிப்புகளுக்கான இடங்களுக்கு 11000 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
10 ) பிளஸ் 2 துணைத் தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட்களை தேர்வுத் துறை ஜூன் 19-ம் தேதி வெளியிடுகிறது
9 ) பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான மறுகூட்டல் முடிவு ஜூன் 18-ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
8 ) அரசுப் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி வகுப்பு வாரந்தோறும் 40 நிமிடங்கள் தனி பாடவேளையாக நடத்தப்பட உள்ளதாக, பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது
7 )அரசுப் பள்ளிகளில் உபரியாக இருந்த 915 இடைநிலை ஆசிரியர்கள் கலந்தாய்வு மூலம் பணிநிரவல் செய்யப்பட்டுள்ளனர்.
6 )மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குகின்ற 'தமிழ்ப்புதல்வன் திட்டம்' வருகின்ற ஆகஸ்ட் மாதத்திலிருந்து செயல்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற ஐம்பெருவிழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
5 ) சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் தரவுப் பகுப்பாய்வு ஆகியவற்றில் பிடெக் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது
4 ) நீட் தேர்வில் 1,563 பேருக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்டுள்ளது. மறுதேர்வு ஜூன் 23-ம் தேதி நடைபெறும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 )நீட் தேர்வுகளில் முறைகேடுகளை அரசு பொறுத்துக் கொள்ளாது. குறைபாடுகள் கண்டறியப்பட்டால் சரி செய்யப்படும் என்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
2 ) அரசு மாதிரி பள்ளிகளில் பணிபுரியும் நூலகர் உட்பட தொகுப்பூதிய ஊழியர்களுக்கான ஊதியத்தை பள்ளிக் கல்வித் துறை உயர்த்தியுள்ளது.
1 ) அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் 3,296 தற்காலிக பணியாளர்களுக்கு வரும் ஆகஸ்ட் மாதம் வரை ஊதியம் வழங்குவதற்கான ஆணையை பள்ளிக்கல்வித் துறை பிறப்பித்துள்ளது.
No comments:
Post a Comment