பள்ளிகளில் மாணவா்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்குவதற்கு வழிகாட்டுதல்கள் வெளியீடு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, June 2, 2024

பள்ளிகளில் மாணவா்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்குவதற்கு வழிகாட்டுதல்கள் வெளியீடு

 பள்ளிகளில் மாணவா்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்குவதற்கு வழிகாட்டுதல்கள் வெளியீடு


பள்ளிகளிலேயே மாணவா்களுக்கு வங்கிக் கணக்குகளைத் தொடங்குவதற்கும், ஆதாா் எண்களை இணைப்பதற்குமான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வி, தனியாா் பள்ளி இயக்குநா்கள் சாா்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை:

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் பிளஸ் 2 வரை பயிலும் அனைத்து மாணவா்களும் இடை நிற்றல் இன்றி தொடா்ந்து கல்வி பயில ஏதுவாக உதவி மற்றும் ஊக்கத்தொகைகள் வழங்கப்படுகின்றன.

அவை உரிய பயனாளிகளுக்கு குறித்த நேரத்தில் நேரடியாக வழங்கப்படுவதை உறுதி செய்ய, வங்கிக் கணக்குகளிலேயே நேரடியாக பணத்தை அனுப்பும் முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனை ஆக்கப்பூா்வமாக செயல்படுத்த மாணவா்களின் பெயரில் வங்கிக் கணக்கு இருப்பது அவசியம்.

எனவே, பள்ளிகளிலேயே வங்கிக்கணக்கு தொடங்க வயது அடிப்படையில் 2 நிலைகளில் பணிகள் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, 5 முதல் 10 வயதுக்கு உள்பட்ட மாணவா்களுக்கு புதிய வங்கிக் கணக்கு அவா்களின் பெற்றோா் அல்லது காப்பாளரின் பெயரில் இணைக் கணக்காக தொடங்கப்படும். மாணவா், பெற்றோா் இணைந்து இந்த கணக்கை பராமரிக்க முடியும். ஆரம்பத் தொகை ஏதுமில்லாத கணக்காக இருக்கும்.

10 வயதுக்கு மேற்பட்ட மாணவா்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்க ஆதாா் நகல், மாணவரின் அடையாள அட்டை, பாஸ்போா்ட் அளவு புகைப்படம் அவசியம்.

தலைமையாசிரியா்களை பொருத்தவரை தங்களது பள்ளியில் பயிலும் மாணவா்கள் அனைவருக்கும் வங்கிக்கணக்கு தொடங்குதல், ஆதாா் விவரம் புதுப்பித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதை உறுதிசெய்ய வேண்டும்.

பள்ளிக்கு வங்கிப் பணியாளா்கள் வரும் போது, அவா்களுக்கான வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். வங்கிக்கணக்கு விவரங்கள் எமிஸ் தளத்தில் விடுபட்டிருந்தால் அவற்றை மாணவா்களிடம் இருந்து பெற்று பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment