டிஜிட்டல் கடல்சார் வணிகத்தில் ஆன்லைன் எம்பிஏ படிப்பு: சென்னை ஐஐடி அறிமுகம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, June 28, 2024

டிஜிட்டல் கடல்சார் வணிகத்தில் ஆன்லைன் எம்பிஏ படிப்பு: சென்னை ஐஐடி அறிமுகம்

 டிஜிட்டல் கடல்சார் வணிகத்தில் ஆன்லைன் எம்பிஏ படிப்பு: சென்னை ஐஐடி அறிமுகம்


சென்னை ஐஐடி மேலாண்மை துறை மற்றும் கடல்சார் பொறியியல் துறை சார்பில் டிஜிட்டல் கடல்சார் வணிகத்தில் (மேரிடைம் அண்ட் சப்ளை செயின்) ஆன்லைன் எம்பிஏ படிப்பு இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கடல்சார் வர்த்தகம் மற்றும் பொருள் விநியோகம் தொடர்பான துறையில் குறைந்தபட்சம் 2 ஆண்டு அனுபவம் வாய்ந்த பட்டதாரிகள் இந்த படிப்பில் சேரலாம். பட்டப் படிப்பில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

ஆன்லைன் தகுதி தேர்வு, நேர்காணல் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். மொத்தம் 100 இடங்கள் உள்ளன. இப்படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தற்போது நடந்து வருகிறது

இது 2 ஆண்டுகால படிப்பு. இதற்கான மொத்த கல்வி கட்டணம் ரூ.9 லட்சம். இதில் 50 சதவீதம் கல்வி உதவித் தொகையாக கிடைக்கும். எஞ்சிய கட்டணத்தை வங்கிகளில் கல்விக் கடனாக பெற முடியும்

இதற்கான வகுப்புகள் செப்டம்பர் மாதம் தொடங்கி, இணையவழியிலும், நேரடி அமர்வாகவும் நடைபெறும். படித்து முடித்ததும் வளாகநேர்காணல் மூலம் பெரிய நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

கடல்சார் வர்த்தகம் மற்றும் பொருள் விநியோக துறையில் தேவையான நிபுணர்களை உருவாக்கும் நோக்கில் இந்த ஆன்லைன் எம்பிஏ படிப்பு தொடங்கப்பட்டுள்ளதாக ஐஐடி இயக்குநர் வி.காமகோடி, டீன் (பேராசிரியர்கள்) கே.முரளி, மேலாண்மை துறை தலைவர் எம்.தேன்மொழி ஆகியோர் செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்தனர்.

No comments:

Post a Comment