அரசுப் பள்ளி ஆய்வக உதவியாளர்கள் பணிநிரவல்: பள்ளிக் கல்வித் துறை வழிகாட்டுதல்கள் வெளியீடு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, June 27, 2024

அரசுப் பள்ளி ஆய்வக உதவியாளர்கள் பணிநிரவல்: பள்ளிக் கல்வித் துறை வழிகாட்டுதல்கள் வெளியீடு

 அரசுப் பள்ளி ஆய்வக உதவியாளர்கள் பணிநிரவல்: பள்ளிக் கல்வித் துறை வழிகாட்டுதல்கள் வெளியீடு

அரசுப் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆய்வக உதவியாளர்களை பணிநிரவல் செய்வதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது

இது குறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட அரசாணை விவரம்: தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்காக அடல் டிங்கரிங், உயர் தொழில்நுட்ப, அறிவியல், மொழி, தொழிற்கல்வி, கணிதம் போன்றவற்றுக்கு ஆய்வகங்கள் உள்ளன. இந்த ஆய்வகங்களை பராமரிப்பதற்காக அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் தலா ஒரு ஆய்வக உதவியாளர் பணியிடம் அவசியமானதாக இருந்து வருகிறது

இதையடுத்து மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் ஆய்வக உதவியாளர் பணியிடங்களை சீரமைப்பு செய்ய முடிவானது. அதன்படி உபரியாக உள்ள ஆய்வக உதவியாளர்களை பணி இடமே அனுமதிக்கப்படாத பள்ளிகளுக்கு பணிநிரவல் செய்யவும், தேவையுள்ள பள்ளிகளுக்கு பகிர்ந்து அளிக்கவும் அனுமதி வழங்கப்பட்டது. அந்தவகையில் சென்னை, மதுரை, கோவை மாநகராட்சி பள்ளிகளை தவிர, அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் பணிநிரவல் செய்யப்பட உள்ளன. இதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, பணிநிரவல் கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் நடத்தப்பட வேண்டும். அதாவது, மேல்நிலைப் பள்ளிகளில் 1,500 மாணவர் உள்ள பள்ளிகளுக்கு ஒரு ஆய்வக உதவியாளர், 1501-3000 வரை 2 பேர், 3 ஆயிரத்துக்கு மேல் 3 பேர் என்றவாறும், உயர்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு பணியிடம் என்றபடியும் பணிநிரவல் செய்ய வேண்டும்.

பணிநிரவல் செய்யும்போது உபரி என கண்டறியப்பட்ட ஆய்வக உதவியாளரில் மூத்தவர் முதலில் பணிநிரவல் செய்யப்பட வேண்டும். இதுதவிர பணிநிரவல் கலந்தாய்வு முதலில் மாவட்டத்துக்குள்ளும், அதன்பின் மாவட்டம் விட்டு மாவட்டம் நடத்தப்படும். பணிநிரவலில் மாற்றுத்திறனாளிகள் வந்தால் அவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். மேலும், விதவைகள், தீவிர நோய் சிகிச்சை பெறுபவர்கள் உள்ளிட்டோருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பன உட்பட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment