தமிழகத்தில் 14 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
தமிழகத்தில் பல்வேறு ஐஏஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஆவடி மாநகராட்சி ஆணையர் ஷேக் அப்துல் ரகுமான் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை மாநகராட்சி ஆணையராக சுங்கபுத்திரா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஓசூர் மாநகராட்சி ஆணையராக ஸ்ரீகாந்த், கடலூர் மாநகராட்சி ஆணையராக அனு நியமிக்கப்பட்டுள்ளனர்
ரஞ்சித் சிங் சேலம் மாநகராட்சி ஆணையராகவும் , கந்தசாமி ஆவடி மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அருங்காட்சியகம் இயக்குநர் பொறுப்பிற்கு கவிதா ராமு ஐஏஎஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புது திருப்பூர் பகுதி வளர்ச்சிக் குழு மேலாண் இயக்குநராக ஹனீஷ் சாப்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு கைவினைப் பொருள்கள் மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குநராக அமிர்தஜோதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும தலைமைச் செயல் அதிகாரியாக ஏ. சிவஞானம் நியமிக்கப்பட்டுள்ளார்
No comments:
Post a Comment