எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, August 19, 2024

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகள்

 எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகள்


தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளின் அரசு ஒதுக்கீட்டுக்கென மொத்தம் 6,630 எம்பிபிஎஸ் இடங்கள், 1,683 பிடிஎஸ் இடங்கள் உள்ளன.

இந்த இடங்களுக்கு மொத்தம் 29,429 பேர் விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு பின்னர், தகுதியான 28,819 மாணவ, மாணவிகளின் தரவரிசை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வெளியிட்டார்.


 இந்த தரவரிசைப் பட்டியலில் நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 720 மதிப்பெண்கள் எடுத்து அகில இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்த பி.ரஜனீஷ் முதலிடம் பிடித்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த இந்த மாணவர் நாமக்கல் கிரீன் பார்க் இன்டர்நேஷனல் பள்ளியில் படித்துள்ளார்.

மேல் அயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளி மாணவர் எம்.சையத் ஆரிஃபின் யூசுப் 2-ம் இடத்தையும், சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் சீனியர் செகண்டரி பள்ளி மாணவி எஸ்.சைலஜா 3-ம் இடத்தையும், 

திருவள்ளூர் பஞ்செட்டி தி வேலம்மாள் இன்டர்நேஷனல் ஸ்கூல் மாணவர் பி.ஸ்ரீராம் 4-ம் இடத்தையும், கிரீன் பார்க் இன்டர்நேஷனல் ஸ்கூல் மாணவி எம்.ஜெயதி பூர்வஜா 5-வது இடத்தையும், கிரீன் பார்க் இன்டர்நேஷனல் ஸ்கூல் மாணவர்கள் ஆர்.ரோஹித் 6-ம் இடத்தையும், எஸ்.சபரீசன் 7-ம்

இடத்தையும், அண்ணாநகர் சென்னை பப்ளிக் ஸ்கூல் மாணவி ரோஷினி சுப்பிரமணியன் 8-ம் இடத்தையும், கிரீன் பார்க் இன்டர்நேஷனல் ஸ்கூல் மாணவர் எம்.ஜே.விக்னேஷ் 9-ம் இடத்தையும் பிடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் 715 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கோவை சுகுணா பிஐபி ஸ்கூல் மாணவர் விஜய் கிருத்திக் சசிகுமார் 710 மதிப்பெண்கள் பெற்று 10-வது இடம் பெற்றுள்ளார்

No comments:

Post a Comment