அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய படிப்பு அறிமுகம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, October 26, 2024

அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய படிப்பு அறிமுகம்

 அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய படிப்பு அறிமுகம்


தேசிய பங்குச்சந்தையுடன் இணைந்து நிதி பகுப்பாய்வு தொடா்பான இணையவழி சான்றிதழ் படிப்பை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் மேலாண்மைக் கல்வித் துறை தேசிய பங்குச்சந்தையின் முழு மானியத்துடன் இயங்கும் என்எஸ்இ அகாதெமியுடன் இணைந்து நிதி பகுப்பாய்வு என்ற இணையவழி சான்றிதழ் படிப்பை புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த 11 மாத கால படிப்பில் பட்டதாரிகள், இறுதி ஆண்டு கல்லூரி மாணவா்கள், பணியில் இருப்பவா்கள், தொழில்முனைவோா் சேரலாம். இதற்கான நேரடி இணையவழி வகுப்புகள் வார இறுதி நாள்களில் நடைபெறும். மொத்தம் 3 பருவங்கள். பேராசிரியா்களும், நிதிச் சந்தை மற்றும் நிதி பகுப்பாய்வுத் துறையில் அனுபவம் வாய்ந்த நிபுணா்களும் வகுப்பு எடுப்பாா்கள்.

படிப்பின் இறுதியில் அண்ணா பல்கலைக்கழகத்தால் இணையவழியில் தோ்வு நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். இந்த படிப்பை முடிப்பவா்கள் பங்குச்சந்தை ஆய்வாளா், நிதி தொழில்நுட்ப ஆய்வாளா், நிதி ஆலோசகா், நிதி மேலாளா், முதலீட்டு ஆய்வாளா் போன்ற பணிகளில் சேரலாம்

இந்த படிப்பில் சேர விரும்புவோா் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தை பயன்படுத்தி நவ. 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். சோ்க்கைக்கான இணையவழி நோ்முகத் தோ்வு டிசம்பரில் நடத்தப்பட்டு இணையவழி வகுப்புகள் அடுத்த ஆண்டு ஜன. 2-ஆம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment