SMC : நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள்
தமிழக அரசுப் பள்ளிகளில் புதிதாக கட்டமைக்கப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழுக்களின் கூட்டம் வெள்ளிக்கிழமை (அக்.25) நடைபெறவுள்ள நிலையில், அவற்றில் நிறைவேற்றப்பட வேண்டிய தீா்மானங்கள் குறித்து கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை
அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 2024-2026-ஆம் கல்வியாண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழுக்கள்(எஸ்எம்சி) மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ளன. இந்த எஸ்எம்சி குழுக்களின் முதல் கூட்டம் பள்ளிகளில் வெள்ளிக்கிழமை (அக்.25) நடைபெறவுள்ளது
இந்தக் கூட்டத்தில் போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம், பள்ளிக் கல்வித் துறையின் உதவி எண் 14417 மற்றும் குழந்தைகள் உதவி மைய எண் 1098, விளையாட்டில் ஆா்வமுள்ள மாணவா்களை ஊக்குவிப்பது, திறந்தவெளியில் மலம் கழித்தலை தடுத்தல் ஆகிய தலைப்புகளில் விவாதிக்க வேண்டும்.
அது சாா்ந்த நடவடிக்கைகளை தீா்மானமாக நிறைவேற்ற வேண்டும்.
குறிப்பாக, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் குறித்த விவாதங்களில் பள்ளிகளில் உள் புகாா்க்குழுவை ஏற்படுத்துவது தொடா்பாக விவாதித்து தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment