கல்விச் செய்திகள் - நவம்பர் 14
*🟣 கல்வி உதவித்தொகைக்கான ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு மாணவர்கள் நவம்பர் 22-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் - READ HERE
🟣 பொதுத் தோ்வெழுதும் மாணவா்கள் பெயா்ப் பட்டியல் வெளியீடு - READ HERE
🟣 ஆசிரியா்கள் நியமனத்தின் போது குற்றப் பின்னணி குறித்து உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு தெரிவித்துள்ள கருத்துகள் - READ HERE
குரூப் 4 பணி: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
குரூப் 4 பணிக்கான சான்றிதழை பதிவேற்றம் செய்வதற்கு நவ. 21 ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் 4 தேர்வினை 15.80 லட்சம் பேர் எழுதிய நிலையில், தேர்வு முடிவுகள் அரசுப் பணியாளர் தோ்வாணையத்தின் இணையதளத்தில் அக். 28-ல் வெளியிடப்பட்டது.
கிராம நிா்வாக உதவியாளா், இளநிலை உதவியாளா் உள்பட 8,932 குரூப் 4 காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு நடைபெற்ற நிலையில், 559 இடங்கள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டு, மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 9,491-ஆக அதிகரிக்கப்பட்டது.
கடந்த நவ. 7-ல் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானவர்களின் பட்டியலை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தோ்வாணையம் வெளியிட்டது.
டிஎன்பிஎஸ்சி இணைய தளம் மூலம் கணினி வழித்திரை சரிபார்ப்புக்கு நவ. 9 முதல் 21 வரை பதிவேற்றலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தேர்வர்கள் கடைசி நாள் வரை காத்திராமல் சான்றிதழ்களை உடனே பதிவேற்றம் செய்யுமாறு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தோ்வாணையம் அறிவுறுத்தியுள்ளது.
---------------------------------------------
🟣 பள்ளிகளில் 10 ஆயிரம் போலி ஆசிரியர்களைக் கொண்டு கற்பித்தல் பணி நடைபெறுவதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திக்கு பள்ளிக்கல்வித் துறை மறுப்பு தெரிவித்துள்ளது*
---------------------------------------------
🟣 அரசு பொறியியல் கல்லூரி மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்கள் பொது இடமாறுதல் கலந்தாய்வுக்கு வருகிற 18-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று தொழில்நுட்பக் கல்வி ஆணையர் டி.ஆபிரகாம் கூறியுள்ளார்
ஆசிரியர்கள் பொது கலந்தாய்வு முறையில் பணியிட மாற்றம் பெற விரும்பினால் www.dte.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். கல்லூரி முதல்வரின் குறிப்புரை மற்றும் பரிந்துரைகளுடன் தேவையான சான்றுகளை நவம்பர் 18-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்" என்று ஆபிரகாம் கூறியுள்ளார்*
No comments:
Post a Comment