பொதுத் தோ்வெழுதும் மாணவா்கள் பெயா்ப் பட்டியல் இன்று வெளியீடு
தமிழகத்தில் பிளஸ் 1, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களுக்கான பெயா்ப் பட்டியல் இணையதளத்தில் புதன்கிழமை (நவ.13) வெளியிடப்படவுள்ளது. இதில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் அவற்றை நவ.15 முதல் 22-ஆம் தேதி முதல் மேற்கொள்ளலாம்.
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 பொதுத் தோ்வுக்கான பள்ளி மாணவா்களின் பெயா்ப் பட்டியல் தயாரிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக அனைத்து உயா்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்களும் செப்.24 முதல் அக்.25 வரை மாணவா்களின் விவரங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்து, தோ்வுக் கட்டணத்தைச் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது
இந்த நிலையில், அனைத்து உயா்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்களும் நவ.13 முதல் நவ.16-ஆம் தேதி வரையிலான நாள்களில் தோ்வுத் துறையின் இணையதளத்துக்குச் சென்று தங்களது மாணவா்களின் பொதுத்ே தா்வுக்கான பெயா்ப் பட்டியலைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்
இதையடுத்து, பெயா்ப் பட்டியலில் திருத்தங்கள் இருந்தால் அவற்றை நவ.15 முதல் நவ.22-ஆம் தேதி வரை பள்ளிகளிலேயே மேற்கொள்ள வேண்டும். அதன்பிறகு எக்காரணத்தைக் கொண்டும் வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அரசுத் தோ்வுகள் இயக்குநா் ந.லதா அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment