பொதுத்தேர்வுக்கு நிகராக அரையாண்டு தேர்வு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, December 3, 2024

பொதுத்தேர்வுக்கு நிகராக அரையாண்டு தேர்வு

 பொதுத்தேர்வுக்கு நிகராக அரையாண்டு தேர்வு


பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வைப் போல, அரையாண்டுத்தேர்வு நடத்தப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில், 6 முதல் பிளஸ்- 2 வகுப்பு வரையிலான மாணவ, -மாணவியருக்கு காலாண்டு, அரையாண்டு உள்ளிட்ட தேர்வுகளுக்கு பொது வினாத்தாள் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது

அவ்வகையில், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், அரையாண்டு தேர்வு, 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு, வரும், 9 முதல் 23-ம் தேதி வரையும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, 10 முதல் 23ம் தேதி வரையும், பிளஸ்- 1, பிளஸ்- 2 மாணவர்களுக்கு, 9 முதல் 23ம் தேதி வரையும் நடத்தப்படுகிறது.

அதில், 10ம் வகுப்பு மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, பொதுத்தேர்வைப் போலவே, அரையாண்டு தேர்வு நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

பள்ளித்தலைமையாசிரியர்கள் கூறியதாவது:

நடப்பு கல்வியாண்டின் பொதுத்தேர்வில், 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கச் செய்ய பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன

நடத்தி முடிக்கப்பட்ட பாடங்களில், வினாத்தாள் தயாரித்து, மாணவர்களுக்கு எழுத்துப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது, அரையாண்டு தேர்வு துவங்க உள்ளதால், பொதுத்தேர்வைப்போலவே அவர்களுக்கு வினாத்தாள் வழங்கப்படும்

குறிப்பாக, தேர்வு, 3 மணி 15 நிமிடம் நடத்தப்படும். தேர்வு துவங்கிய 10 நிமிடம் வினாக்களை படிக்கவும், தொடர்ந்து வரும் 5 நிமிடம் விடைத்தாளில் அவரவரின் விபரங்கள் பதிவு செய்யவும் நேரம் ஒதுக்கப்படும். அடுத்து வரும் 3 மணி நேரம் தேர்வு எழுத அனுமதிக்கப்படும்.

இவ்வாறு, கூறினர்.

பள்ளி மாற்றி திருத்தம்!

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், பொதுத்தேர்வுக்கு நிகராக, அரையாண்டு தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள், அந்தந்த பள்ளிகளில் திருத்தம் செய்யப்படுவதை தவிர்த்து, பிற பள்ளிகளுக்கு அனுப்பி திருத்துவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், கோவை மாவட்டத்தில் அந்தந்த பள்ளிகளிலேயே மாணவர்களின் விடைத்தாள் திருத்தப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தை போன்று, கோவை மாவட்டத்திலும், பிற பள்ளிகளுக்கு அனுப்பி விடைத்தாள் திருத்தம் செய்து, மாணவர்களின் கற்றல் திறனை வலுப்படுத்த வேண்டும், என, கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

No comments:

Post a Comment